பன்னீர் கட்லட்
தேவையான பொருட்கள் – வெங்காயம்-2,பன்னீர்-2பாக்கெட்,
குடை மிளகாய் 1,தக்காளி 1.1/2,கான்ப்லார் 5 ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு,மிளகாய் தூள் தேவையான அளவு
கறிமசாலா 11/2 ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,
டோமேட்டோ சாஸ்,பேப்பர் 2ஸ்பூன்
செய்முறை
பன்னீரை சிரிதாக நறுக்கி கொள்ளவும்.
அதனுடன் குடை மிளகாய் தக்காளி வெங்காயம் ஆகியவற்றையும் நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் தக்காளி குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பன்னீரையும் சேர்க்கவும்..
மஞ்சள் தூள் மிளகாய் தூள் கறிமசாலா தூள் உப்பு சேர்த்து கிளறி தேவைபட்டால் பேப்பர் தூள் சேர்த்து கொள்ளலாம்.
பன்னீரையும் சேர்த்து கலந்து கான் பிலார் மாவும் சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ள வேண்டும்.வட்டமாக திரட்டி கொள்ளவும்.
அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி பன்னீர் கலவையை பொட்டு பொறித்து எடுத்தால் சுவையான பன்னீர் கட்லட் ரெடி.
0
Leave a Reply